செய்திகள் :

தெலுங்கு புரமோஷனில் கன்னடம்... விமர்சனத்திற்கு ஆளான ரிஷப் ஷெட்டி!

post image

காந்தாரா சேப்டர் 1 தெலுங்கு புரமோஷனில் நடிகர் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தால் இப்படத்திற்கு இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அனைத்து மொழிகளிலும் சேர்த்து 17 கோடி பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் சாதனை புரியும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த காந்தாரா - 1 புரமோஷனில் கலந்துகொண்ட ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசினார். இதனைக் கேட்ட ரசிகர்கள், தெலுங்கு பேசாமல் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் பேசியது கண்டிக்கத்தக்கது என விமர்சித்து வருகின்றனர்.

உண்மையிலேயே, ரிஷப்புக்கு தெலுங்கு தெரியாதா இல்லை கன்னடத்தில் பேசும் முடிவோடு வந்தாரா எனத் தெரியவில்லை.

அதேநேரம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளிலேயே நேர்காணல்களை அளித்து வரும் ரிஷப் ஷெட்டிக்கு தெலுங்கு மட்டும் தெரியாதா என்றும் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இதையும் படிக்க: கைதி - 2 நிலைமை என்ன?

actor rishab shetty faces controversy about using kannada instead of telugu in hyderabad event.

விஷ்ணு விஷாலின் ஆர்யன் டீசர்!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திர... மேலும் பார்க்க

ஜிவி பிரகாஷ் - சைந்தவிக்கு விவாகரத்து!

இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவிக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கருத்து வேறுபாட்டின் கா... மேலும் பார்க்க

கார்த்திகை தீபம் தொடரில் இணையும் கீர்த்தனா!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் கார்த்திகை தீபம் தொடரில் நடிகை கீர்த்தனா பொதுவல் இணையவுள்ளார். நினைத்தேன் வந்தாய் தொடரில் நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த கீர்த்தனா, தற்போது கார்த்திகை தீபம் தொடரில் முக்க... மேலும் பார்க்க

ஸ்ரீமத் ராமாயணம் தொடரின் குழந்தை நட்சத்திரம் பலி!

ஸ்ரீமத் ராமாயணம் தொடரில் நடித்து புகழ் பெற்ற குழந்தை நட்சத்திரமான வீர் ஷர்மா தனது வீட்டில் நேர்ந்த தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் ... மேலும் பார்க்க

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை வழிபட உகந்த நேரம்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் இணையதள ஜோதிடர் ராமராமானுஜ தாசன் தெரிவித்துள்ளார்.கல்விக்கு அதிபதியும், நம் தொழிலுக்கும், ஜீவனத்திற்கும் துணை புரியும் கருவிகளை வைத்து சரஸ்வத... மேலும் பார்க்க