செய்திகள் :

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

post image

பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையினை ஒன்பது மாதங்களில் அரசிற்கு அளித்திட ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அவர்களின் தலைமையில் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு கடந்த பிப்ரவரி 2025-இல் அரசு அமைத்தது.

பின்னர், உரிய அறிக்கையினை செப்டம்பர் 2025-க்குள் அரசிற்கு அளித்திட இக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டது.

அரசுப் பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்திட, 194 அரசுப் பணியாளர் சங்கங்களுடன் ஒன்பது சுற்றுகள் கூட்டங்களை நடத்தியுள்ளது.

மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் (LIC) மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. துல்லியமான மற்றும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு உறுதுணையாக காப்பீட்டுக் கணிப்பாளர் மற்றும் நிதி வல்லுநர்களின் சேவையையும் குழு பயன்படுத்திக் கொண்டது.

கடந்த எட்டு மாதங்களில், 7.36 லட்சம் பணியாளர்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்பட ஓய்வூதியதாரர்களின் தரவுகளை சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது.

கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான பணிகள், மாநில அரசின் ஓய்வூதிய பொறுப்புகளை மதிப்பீடு செய்வதற்கான உரிய தொழிநுட்ப வழிமுறைகளை வழிவகுக்க உதவியுள்ளன.

சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மற்றும் தரவுகளின் எண்ணிக்கை அதிகம் என்பதாலும், மத்திய அரசு, சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் ஆகியவற்றுடன் மேலும் கலந்தாய்வுகள் நடத்தவேண்டியிருப்பதாலும் குழு தனது பணியினை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இச்சூழ்நிலையில், இக்குழுவானது இன்று (30.09.2025) ஓய்வூதிய திட்டங்கள் குறித்த தனது இடைக்கால அறிக்கையினை அரசிற்கு சமர்ப்பித்துள்ளது. மேற்கூறிய கலந்தாய்வுகளை மேற்கொண்ட பின்னர், குழு தனது இறுதி அறிக்கையினை விரைவில் அரசிற்கு சமர்ப்பிக்கும்.

இதையும் படிக்க: வாழும் தெய்வம்: நேபாளத்தில் 2 வயது சிறுமி கடவுளாகத் தேர்வு!

The interim report of the committee regarding the introduction of the old pension scheme has been submitted to the Tamil Nadu government.

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதால், வழக்குப் பதிவு செய்யப... மேலும் பார்க்க

கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

சென்னை: கரூரில், சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில் திடீரென கூட்டம் அதிகரித்தது பற்றி சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம் அளி... மேலும் பார்க்க

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மின் தடை ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்க... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.மழை தொடர்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியைவிட்டு நீக்காதது ஏன்? என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியா... மேலும் பார்க்க