செய்திகள் :

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

post image

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதால், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது அதிகப்படியாக கூட்டத்தால் நேரிட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்திற்கான காரணங்கள் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்ட நெரிசல் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் எச்சரித்திருந்தார். இதனிடையே தவெக தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவு சர்ச்சையானதும் சில நிமிடங்களில் அதனை திருத்தி பதிவிட்டுள்ளார். பின்பு அதனையும் நீக்கியுள்ளார்.

அதில், இரவு 11.29 மணிக்கு இலங்கை, நேபாளம் போல இளைஞர் புரட்சி எழுச்சிக்கான அறைகூவல் எனப் பதிவிட்டு, பின்னர் அந்த சொற்களை நீக்கி மீண்டும் பதிவிட்டிருந்தார். அதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பதிவை முழுமையாக நீக்கியுள்ளார்.

எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான விபத்து: 9 பேர் பலி

சென்னை அருகே எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பார்க்க

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்... மேலும் பார்க்க

கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

சென்னை: கரூரில், சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில் திடீரென கூட்டம் அதிகரித்தது பற்றி சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம் அளி... மேலும் பார்க்க

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மின் தடை ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்க... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.மழை தொடர்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியைவிட்டு நீக்காதது ஏன்? என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியா... மேலும் பார்க்க