செய்திகள் :

Sasikumar: "என் வளர்ச்சிக்காக இந்தப் படத்தில சசி அண்ணா நடிக்க ஒத்துக்கிட்டாரு" -'யாத்திசை' இயக்குநர்

post image

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.

2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘யாத்திசை’. சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்டது.

யாத்திசை | Yaathisai
யாத்திசை | Yaathisai

‘யாத்திசை’ படத்திற்குப் பிறகு தரணி ராஜேந்திரன் ஜே.கே. ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக படக்குழு நேற்று (செப்.30) அறிவித்திருக்கிறது.

சசிகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

இது தொடர்பாக தரணி ராசேந்திரன் வெளியிட்டிருக்கும் பதிவில், "சசிகுமார் அண்ணன் நான் தற்போது இயக்கி வரும் படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நான் அவரை அந்தக் கதாபாத்திரத்திற்காக அணுகியபோது, மிகவும் எளிமையாகவும் அன்பாகவும் என்னை ஊக்கப்படுத்தினார்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், அவர் என் வளர்ச்சிக்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

 தரணி ராசேந்திரன் - சசிகுமார்
தரணி ராசேந்திரன் - சசிகுமார்

'இப்போ என்னடா. சரி போ, நீ நல்லா பண்ணு. என்ன சொல்லுறியோ நடிச்சு தரேன். எப்போ வரணும் சொல்லு'. இந்தப் பதிலே நான் அவரைச் சந்திக்கும் போது வந்தது.

உண்மையான எளிமையான மனிதர்கள் சினிமாவில் அரிது. அதிலும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ஒருவர் இப்படியாக இருப்பது மிக அரிது.

சினிமாவை நேசிக்கும் அடுத்த தலைமுறை கலைஞர்களை ஊக்கப்படுத்தும் மனம் கொண்டவர்.

சசிகுமார் போன்ற உண்மையான மனிதர்கள் தான் சினிமாவை உயிரோடு வைத்திருக்கிறார்கள்.

அவர் எனக்காக நடிக்க முன்வந்துள்ளதை, என் உழைப்பிற்கான அங்கீகாரமாகப் பார்க்கிறேன்.

இந்தப் படம் ஒரு கதை மட்டும் அல்ல… அது சசி அண்ணனின் நம்பிக்கையையும், என் உழைப்பின் மதிப்பையும் சுமந்திருக்கிறது.

படம் சிறப்பாக வந்து கொண்டிருக்கிறது. படத்தைத் தயாரித்து வரும் ஜே. கமலகண்ணன் அவர்களுக்கும், என் படக்குழுவினர்கள், நடிகர்கள், குறிப்பாக என் உதவி இயக்குநர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

 தரணி ராசேந்திரன் - சசிகுமார்
தரணி ராசேந்திரன் - சசிகுமார்

விரைவில் மற்ற விவரங்களை வெளியிடுகிறேன். பெரும் உழைப்புடன் எடுக்கப்படும் இந்தப் படம், உங்களால் கொண்டாடப்படும் என நம்புகிறேன், நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார்.

புதிய ரேஸ் கார், புதிய ட்ராக்; ஆசிய லீ மான்ஸ் தொடரில் களமிறங்கும் அஜித்!

நடிகர் அஜித் குமார் தனது முழு கவனத்தையும் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.அஜித் குமார் ரேஸிங் நிறுவனத்தை தொடங்கி, அதைப் பல்வேறு உலக நாடுகளின் கார் பந்தயப் போட்டிகளிலும் பங்கெடுக்கச் செய்துவருகிறா... மேலும் பார்க்க

கரூர் மரணங்கள்: "உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம்" - STR49 படக்குழு

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரையில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.கரூர் சோகம்விஜய்யைக் காணக் கூடியவர்களில் பலர் க... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் மரணங்கள்: "விஜய்யின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்" - ஆர்.வி. உதயகுமார்

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கரூர்நெரிசல் மரணங்கள் குறித்துப் பேசிய... மேலும் பார்க்க

`சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர், சோதனை வரும்போது சப்போர்ட்டாக இருப்போம்' -விஜய்க்கு ஆதரவாக பேரரசு

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, "விஜய் சார் இன்று அரசியல் தலைவராக இருக்... மேலும் பார்க்க