செய்திகள் :

கரூர் மரணங்கள்: "உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம்" - STR49 படக்குழு

post image

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த அக்டோபர் 27ம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பரப்புரையில் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்த சோகம் நடைபெற்றது.

கரூர் மருத்துவமனை
கரூர் சோகம்

விஜய்யைக் காணக் கூடியவர்களில் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் தவெக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பாகவும் தமிழக அரசு சார்பாகவும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் STR49 படக்குழு சார்பாக இரங்கலைப் பதிவு செய்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தாணு.

கலைப்புலி எஸ். தாணு
கலைப்புலி எஸ். தாணு

இதுகுறித்த அவரது சமூக வலைத்தளப் பதிவில், "கரூரில் நடந்த விபத்தில், உயிரிழந்தோரைக் கண்டு பெருந்துயர் கொள்கிறோம். உறவுகளை இழந்து வாடும் அவர்களது உற்றார் உறவினர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவில் முழுவதும் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.

வெற்றிமாறன், சிலம்பரசன், வி கிரியேஷன்ஸ், STR49 படக்குழுவினர்" என எழுதியிருக்கிறார்.

Sasikumar: "என் வளர்ச்சிக்காக இந்தப் படத்தில சசி அண்ணா நடிக்க ஒத்துக்கிட்டாரு" -'யாத்திசை' இயக்குநர்

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க இருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது. 2023-ம் ஆண்டு தரணி ராசேந்திரன் இயக்கத்தில்... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் மரணங்கள்: "விஜய்யின் மனசு எவ்வளவு பாரமாக இருந்திருக்கும்" - ஆர்.வி. உதயகுமார்

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஆர்.வி உதயகுமார் கரூர்நெரிசல் மரணங்கள் குறித்துப் பேசிய... மேலும் பார்க்க

`சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர், சோதனை வரும்போது சப்போர்ட்டாக இருப்போம்' -விஜய்க்கு ஆதரவாக பேரரசு

நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது. அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு, "விஜய் சார் இன்று அரசியல் தலைவராக இருக்... மேலும் பார்க்க

இட்லி கடை: ``நானும் தனுஷும் மதுரைல ரோட்டு கடையில சாப்பிடுவோம்!" - அருண் விஜய் ஷேரிங்ஸ்

தனுஷ் இயக்கி நடித்திருக்கும் `இட்லி கடை' படம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வருகிறது. அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்க... மேலும் பார்க்க