செய்திகள் :

140 கோடி மக்களுக்காக வெற்றி பெற நினைத்தேன்: திலக் வர்மா

post image

140 கோடி மக்களுக்காக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாக இந்திய வீரர் திலக் வர்மா மனம் திறந்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. துபையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 9-வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய திலக் வர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 140 கோடி மக்களுக்காக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என நினைத்ததாக இந்திய வீரர் திலக் வர்மா மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் முதலில் சிறிது அழுத்தமாக இருந்தது. ஆனால், மற்ற விஷயங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு நாட்டினை முதன்மையாக மனதில் வைத்துக் கொண்டேன். நாட்டுக்காக இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன்.

அழுத்தம் காரணமாக நன்றாக விளையாடாமல் ஆட்டமிழந்தால், நாட்டு மக்கள் 140 கோடி பேரும் ஏமாற்றமடைந்திருப்பார்கள். பாகிஸ்தான் வீரர்களின் தேவையற்ற கிண்டல் பேச்சுகளுக்கு ஆசிய கோப்பையை வெல்வதே சரியான பதிலாக இருக்கும் என நினைத்து விளையாடினேன். நாட்டுக்காக போட்டியை வென்று கொடுத்தது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார்.

ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் திலக் வர்மா 53 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

Indian player Tilak Verma has opened up about his desire to win the Asia Cup final for the benefit of 1.4 billion people.

இதையும் படிக்க: சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!

ஆசிய கோப்பையை இந்தியாவிடம் வழங்க வலியுறுத்தும் பிசிசிஐ; மறுக்கும் மோஷின் நக்வி!

இந்திய அணியிடம் ஆசிய கோப்பை வழங்கப்படாததற்கு பிசிசிஐ தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தத் ... மேலும் பார்க்க

நியூசி.க்கு எதிரான டி20 தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் காயம் காரணமாக விலகியுள்ளார்.ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொட... மேலும் பார்க்க

சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடும் தினேஷ் கார்த்திக்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக் சர்வதேச லீக் டி20 தொடரில் விளையாடவுள்ளார்.சர்வதேச லீக் டி20 தொடரின் 4-வது சீசன் வருகிற டிசம்பரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் ... மேலும் பார்க்க

இந்திய ராணுவத்தால் பலியானோரின் குடும்பத்துக்கு பரிசுத் தொகையை வழங்கிய பாகிஸ்தான் அணி!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்டு பலியானோரின் குடும்பங்களுக்கு ஆசியக் கோப்பையில் பெற்ற பரிசுத் தொகையை வழங்க பாகிஸ்தான் அணி முடிவுசெய்துள்ளது.ஐக்கிய அரபு அமீரகத்தின் ... மேலும் பார்க்க

38 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல்தர வீரர்!

பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 38 வயதான முதல்தர கிரிக்கெட் வீரருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வ... மேலும் பார்க்க

மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சியளித்து புதிய வரலாறு படைத்த நேபாளம்!

டி20 கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு அதிர்ச்சியளித்து நேபாள அணி புதிய வரலாறு படைத்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் நேபாள அ... மேலும் பார்க்க