விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அ...
தவெக: "கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? விரைவில் உண்மை வெளிவரும்" - விஜய் விளக்கம்
கடந்த சனிக்கிழமை இரவு (செப் 27) விஜய்யின் கரூர் பிரசாரத்தில் ஏற்பட்ட பெரும் கூட்ட நெரிசலால் இதுவரை 41 பேர் உயிரிழந்திருப்பது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் துயர சம்பவம் குறித்து விரிவான அறிக்கையைச் சமர்பிக்க தமிழ்நாடு அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரித்து வருகிறது.
இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள், காணொலிகள் வெளியாகி வருகின்றன. இதில் உண்மை எது, வதந்தி எது என்று தெரியாமல் மக்கள் குழம்பிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரித்திருந்த தவெக விஜய், இப்போது வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.