கரூர் மரணங்கள்: TVK BJP DMK - ஆளுக்கொரு அரசியல் கணக்கு; மக்களை மறந்த கட்சிகள்| V...
இத்தாலி பிரதமர் மெலோனிக்காக முன்னுரை எழுதிய மோடி!
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதைப் புத்தகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னுரை எழுதியுள்ளார்.
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் சுயசரிதையான “ஐயம் ஜார்ஜியா: மை ரூட்ஸ், மை பிரின்ஸிபிள்ஸ்” புத்தகத்தை ரூபா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
இந்த நிலையில், இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியுள்ள பிரதமர் மோடி, ‘இது வெறும் சுயசரிதை மட்டுமல்ல, மெலோனியின் மான் கி பாத்’ எனக் கூறியுள்ளார்.
மெலோனியின் சுயசரிதைக்கு அவர் எழுதிய முன்னுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
“மெலோனியின் வாழ்க்கை; அரசியல், அதிகாரத்தை விட, அவரது தைரியம், பொது சேவை மற்றும் இத்தாலி மக்கள் மீதான அர்ப்பணிப்பு குறித்தது. கடந்த 11 ஆண்டுகளில் எனக்கு பல்வேறு உலகத் தலைவர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில நேரங்களில் அவர்களது கதைகள், கலாசாரங்கள் மற்றும் நூற்றாண்டுகளைக் கடந்த கொள்கைகளை நினைவூட்டுகின்றன.
அதுபோல், பிரதமர் மெலோனியின் வாழ்க்கையில் பல முக்கிய தருணங்கள் உள்ளன. அதனால், இந்தப் புத்தகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவரது பயணம் ஊக்கமளிப்பதுடன் வரலாற்றுச் சிறப்புள்ளது.
பிரதமர் மெலோனியின் கதைக்கும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய மரபுகளில் பல வடிவங்களில் போற்றப்படும் தெய்வீக பெண் சக்தியான நாரி சக்தியின் கருத்துக்கும் இடையில் ஒரு தொடர்பு உள்ளதைக் காண முடிகிறது.
இந்த முன்னுரையை எழுதுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இது வெறும் சுயசரிதை அல்ல; இது அவரது மான் கி பாத்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: காஸாவுக்கான டிரம்ப்பின் அமைதித் திட்டம் சாத்தியமா? அறிந்து கொள்ள வேண்டியவை என்ன?