விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அ...
அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக். 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை (அக். 1) ஆயுத பூஜை மற்றும் நாளை மறுநாள் (அக். 2) விஜயதசமி இரண்டு நாள்கள் அரசு விடுமுறையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
வார இறுதி நாள்களான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையே அக். 3 ஆம் தேதி வேலை நாளாக இருந்தது.
வரும் அக்டோபர் 3ம் தேதியையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் அக். 3 ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரும். அக். 3 ஆம் தேதியை பொது விடுமுறை நாளாக அறிவித்தால், அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாள்கள் விடுமுறை கிடைக்கும். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இதையும் படிக்க: பேசக்கூடிய மனநிலையில் இல்லை: ஆதவ் அர்ஜுனா