வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - ...
இட்லி கடை மேக்கிங் விடியோ!
நடிகர் தனுஷின் இட்லி கடை மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான இட்லி கடை நாளை (அக். 1) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அருண் விஜய், நித்யா மெனன், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் உணர்வுப்பூர்வமான பின்னணியில் உருவாகியிருப்பது போல் தெரிகிறது.
படத்தில் பாடல்கள் கவனம் ஈர்த்த அளவிற்கு டிரைலர் ஈர்க்கவில்லை என்றாலும் தனுஷ் ரசிகர்கள் இட்லி கடைக்கு காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், இப்படத்தின் மேக்கிங் விடியோவை தயாரிப்பு நிறுவனமான டான் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
ராயனுக்குப் பின் தனுஷ் தனுஷ் இயக்கி நடித்துள்ள படமென்பதால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.