செய்திகள் :

கோவைக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: 1,010 இ-மெயில் முகவரிகள் கண்காணிப்பு! - சைபர் கிரைம்

post image

கோவைக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வரும் நிலையில் 1,010 இ-மெயில் ஐ.டி.களை காவல்துறையினர் கண்டுபிடித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

சமீப காலமாக விமான நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல் கோவை விமான நிலையம் உள்பட நாடு முழுவதும் உள்ள 100 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதற்கு முன் கோவையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்த நாள்களில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கடந்த 26 ஆம் தேதி மற்றும் அவிநாசி சாலையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் எதிரே உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு 27 ஆம் தேதி இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

அதேநாள் பிற்பகல் கோவை மாவட்ட நீதிமன்றத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. நேற்று கோவை விமான நிலையம் உள்பட நாட்டின் பல்வேறு பள்ளிகள், விமான நிலையங்களுக்கு குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மிரட்டல் வரும் ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் காவல் துறையினர் விரைந்து சென்று அனைத்துப் பகுதிகளிலும் சோதனை நடத்துகின்றனர்.

இதுவரை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 1,000 இ-மெயில் ஐ.டி.களை கண்டுபிடித்து உள்ள சைபர் கிரைம் போலீசார், பின்னணியில் உள்ள நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி காவல் துறையினர் கூறும்போது போலி வெடிகுண்டு மிரட்டல் இ-மெயில்கள் நடப்பாண்டில் 24 முறை வந்து உள்ளதாகவும் கடந்தாண்டு இது 23 ஆக இருந்தது எனவும் இத்தகைய மிரட்டல்கும்பல் டார்க் - வெப் வாயிலாக இ-மெயில்களை அனுப்புகின்றனர்,அதில் அவர்களின் அடையாளங்கள் தெரியாது, இருப்பினும் தொடர்ந்து கண்காணிக்கிறோம், இதுவரை 1,010 இ-மெயில் ஐ.டி.களில் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

1,010 email addresses are monitoring for kovai bomb threat bomb: Cyber crime

கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

சென்னை: கரூரில், சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில் திடீரென கூட்டம் அதிகரித்தது பற்றி சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம் அளி... மேலும் பார்க்க

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மின் தடை ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்க... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.மழை தொடர்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியைவிட்டு நீக்காதது ஏன்? என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியா... மேலும் பார்க்க

அக். 3 பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படுமா?

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக். 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் பொது விடுமுறை நாளாக அறிவிக்க தமிழக அரசு பரிசீலனை செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை (அக். 1) ஆயுத பூஜை மற்றும் நாளை மறுந... மேலும் பார்க்க

கரூர் செல்லாதது ஏன்? விடியோ வெளியிட்டார் தவெக தலைவர் விஜய்

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக தவெக தலைவர் விஜய் இன்று விடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.கரூரில், தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மக்கள் சந்... மேலும் பார்க்க