விளம்பரம் இல்லாமல் யூடியூப் பார்க்கலாம்... யூடியூப் பிரீமியம் லைட் இந்தியாவில் அ...
கரூரில் பாஜக எம்பிக்கள் குழு ஆய்வு!
கரூரில் கூட்டநெரிசல் பலி குறித்து ஹேமமாலினி தலைமையிலான பாஜக குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க எம்.பி. ஹேமமாலினி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி குழு அமைத்தது.
ஹேமமாலினி தலைமையில் அமைக்கப்பட்ட இந்த எம்.பி.க்கள் குழுவில் அனுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால் உள்பட 8 மூத்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர், சம்பவம் நடந்த இடத்தை ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்டோரைச் சந்திப்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு இன்று காலை வந்தடைந்தனர்.
கோவையிலிருந்து சாலை வழியாக கரூர் சென்ற குழுவினர், முதலில் கூட்டநெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு செய்து, அங்கிருந்த மக்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர்.
பாஜக எம்பிக்கள் குழுவுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் விளக்கம் அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்கள் மற்றும் பலியானோரின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்கவுள்ளனர்.
முன்னதாக, மத்திய அரசு தரப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் கரூரில் நேற்று ஆய்வு செய்தனர்.