செய்திகள் :

கரூர் பலி: அரசியல் விளையாட்டைத் தொடங்கிவிட்டது பாஜக! - திருமாவளவன்

post image

கரூர் நெரிசல் பலி விவகாரத்தில் பாஜக தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஆய்வு செய்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பாஜக எம்.பி. ஹேமமாலினி தலைமையிலான குழு இன்று கரூர் வந்துள்ளது. அந்த குழு கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து சம்பவம் தொடர்பாக விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தொல். திருமாவளவன், "கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக.

கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை கண்டறியும் குழுவை' அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதே ஆகும்.

இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கமும் உடனடியாக இதுபோன்ற உண்மை அறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறோம். பாஜக'வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது.

ராகுல் காந்தி இது தொடர்பாக தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை நியமித்திட வேண்டுமென விசிக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VCK leader Thirumavalavan says that BJP has started a political game in Karur stampede issue

இதையும் படிக்க | சென்னை தி.நகர் மேம்பாலத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!

பழைய ஓய்வூதியத் திட்டம்: தமிழக அரசிடம் இடைக்கால அறிக்கை சமர்பிப்பு!

பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக, குழுவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்... மேலும் பார்க்க

தவெக ஆதவ் அர்ஜுனா மீது வழக்கு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைதளப் பக்கத்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டதால், வழக்குப் பதிவு செய்யப... மேலும் பார்க்க

கரூர் பலி: திடீரென கூட்டம் அதிகரித்தது எப்படி? ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம்

சென்னை: கரூரில், சனிக்கிழமை நடந்த தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தின்போது, நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான நிலையில் திடீரென கூட்டம் அதிகரித்தது பற்றி சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் விளக்கம் அளி... மேலும் பார்க்க

தவெகவின் புகாரை மறுக்கும் அரசு: கரூரில் நடந்தது என்ன? - அதிகாரிகள் விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசும்போது மின் தடை ஏற்படவில்லை என அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட பல புகார்களை ஆதாரத்துடன் அரசுத் தரப்பில் மறுக்க... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இன்றுடன் முடிவு!

தென்மேற்கு பருவ மழை இன்றுடன் முடிவடைகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.மழை தொடர்பான கணிப்புகளை சமூக வலைதளங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் பிரதீப் ஜான்... மேலும் பார்க்க

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து நீக்காதது ஏன்? விஜய்க்கு ஆ.ராசா கேள்வி

வன்முறையைத் தூண்டும் ஆதவ் அர்ஜுனாவை கட்சியைவிட்டு நீக்காதது ஏன்? என்று தவெக தலைவர் விஜய்க்கு திமுக எம்.பி ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் பலியா... மேலும் பார்க்க