செய்திகள் :

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா! பிரதமர் மோடி பங்கேற்பு!

post image

தில்லியில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில், அம்பேத்கர் சர்வதேச மையத்தில், வரும் அக்டோர்பர் 1 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதுபற்றி, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1925 ஆம் ஆண்டு, மறைந்த கே.பி. ஹெட்கேவரினால் நாக்ப்பூரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சைபர் குற்றங்களில் முதலிடம் தனிநபர் தகவல் திருட்டு!

It has been reported that Prime Minister Narendra Modi will participate as the special guest at the centenary celebrations of the RSS in Delhi.

வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - கேரள முதல்வர்

வயநாடு நிலச்சரிவுக்கு, மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவி இதுவரை வழங்கப்படவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டின் ஜூலை 30 ஆ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து தலைநகர் தில்லிக்கு இன்று காலை சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று காலை மும்பைய... மேலும் பார்க்க

காந்தியும் மோடியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்!லண்டனில் காந்தி சிலை மீது பெயிண்ட் வீச்சு!

லண்டன் டேவிஸ்டாக் சதுக்கத்தில் உள்ள காந்தி சிலையின் கீழ், ’மோடியும் காந்தியும் ஹிந்துஸ்தானி பயங்கரவாதிகள்’ என்று மர்ம நபர்கள் எழுதியுள்ளனர்.மேலும், காந்தி சிலை மீது வெள்ளை நிற பெயிண்ட்டும் வீசப்பட்டுள... மேலும் பார்க்க

பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் விஜய் குமார் மல்ஹோத்ரா செவ்வாய்க்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 93.வயதுமூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற... மேலும் பார்க்க

ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: பாஜக நிா்வாகி மீது வழக்குப்பதிவு

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக நிா்வாகி ப்ரிண்டு மகாதேவன் மீது காவல் துறையினா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா... மேலும் பார்க்க

டியுஎஸ்யு முன்னாள் தலைவரிடம் பணம் கேட்டு மிரட்டல்

தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்க (டியுஎஸ்யு) முன்னாள் தலைவா் ரோனக் காத்ரி, சா்வதேச கைப்பேசி எண்ணிலிருந்து பேசிய நபா் ரூ.5 கோடி கேட்டு தன்னிடம் மிரட்டல் விடுத்ததாக தில்லி காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க