வயநாடு நிலச்சரிவு! மத்திய அரசு அனுமதித்த ரூ.260 கோடி நிதியுதவியை வழங்கவில்லை! - ...
Rain Update: 'இந்த வாரம் எப்போது மழை?' - சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரியின் வானிலை அப்டேட்!
தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்த வாரம் முழுவதும் தமிழ்நாட்டில் மழை பொழியும் என்று முன்னர் சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
சென்னை, கோவை, மதுரை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இந்த வாரம் முழுவதும் மழை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில்...
இன்றும், நாளையும் ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான மழை பெய்யலாம்.
அக்டோபர் 2, 3 தேதிகளில், ஓரளவு மேகமூட்டம் இருக்கும். இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
அக்டோபர் 4, 5 தேதிகளில், ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
கோவையில்...
இன்று ஓரளவு மேகமூட்டம் இருக்கும் லேசான மழை பெய்யலாம்.
நாளை ஓரளவு மேகமூட்டம் இருக்கும்.
அக்டோபர் 2, 3 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான அல்லது மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.
அக்டோபர் 4, 5 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான மழை பெய்யும்.
மதுரையில்...
இன்று ஓரளவு மேகமூட்டம் இருக்கும்.
நாளை ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
அக்டோபர் 2, 3, 4 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான மழை பெய்யலாம்.
அக்டோபர் 5-ம் தேதி ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
புதுச்சேரியில்...
இன்றும், நாளையும் ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான மழை பெய்யலாம்.
அக்டோபர் 2, 3 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம் இருக்கும். இடியுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
அக்டோபர் 4, 5 தேதிகளில் ஓரளவு மேகமூட்டம் இருக்கும். லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 29, 2025
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) September 29, 2025