செய்திகள் :

கரூர் நெரிசல்: அவதூறு பரப்பிய வழக்கில் யூடியூபர் பெலிக்ஸ் கைது! - என்ன நடந்தது?

post image

கரூர் சம்பவம்

தவெக தலைவர் விஜய் கரூரில் 27-ம் தேதி பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பலர் சிகிச்சையில் இருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்திருக்கிறது. அந்த ஆணையமும் விசாரணையைத் தொடங்கி உள்ளது.

மற்றொருபுறம் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதற்கிடையில், கரூர் நெரிசல் தொடர்பாகப் பல்வேறு வதந்திகளும், அவதூறுகளும் சமூக வலைத்தளங்களில் பரவிவருகின்றன.

இது தொடர்பாகப் பேசிய முதல்வர் ஸ்டாலின்,``கரூர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம், அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டார்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

கைது

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளைப் பதிவு செய்த 3 பேரை நேற்று காவல்துறை கைது செய்திருக்கிறது.

இதில் ஒருவர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர், மற்ற 2 பேரும் த.வெ.க-வைச் சேர்ந்தவர்கள். இந்த கைது நடவடிக்கையின் தொடர்ச்சியாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு இன்று காலையில் 7.30 மணிக்குக் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை காவல் ஆணையரகத்தில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மாமனார்-மாமியாரைக் கொல்ல சதி; காரை ஏரியில் பாயவிட்டு தப்பி ஓடிய மருமகன் - என்ன நடந்தது?

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகிலுள்ள ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்தவர் காளிதாசன் மகன் அரவிந்தன் (வயது 32). இவரும், பக்கிரிதக்கா பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் நந்தினி என்பவரும் கடந்த 13 ... மேலும் பார்க்க

ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட ஊடகவியலாளர்; கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கும் மனைவி - காரணம் என்ன?

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் பிரதாப். ஊடகவியலாளரான இவர் கடந்த 19-ம் தேதி திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜீவ் பிரதாப்பின் குடும்பத்தினர் காவல் நி... மேலும் பார்க்க

கோத்தகிரி: தலையில் காயம்,தேயிலைத் தோட்டத்தில் மர்மாக கிடந்த வடமாநில பெண்ணின் சடலம்; விசாரணை தீவிரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான வடமாநில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை தோட்டங்களைப் பொறுத்தவரை பெரும்பாலான வடமாநில தொழில... மேலும் பார்க்க

``இனிமே இங்க வந்தா கொன்னுடுவோம்" - ஆம்புலன்ஸ் டிரைவரின் புகார் - FIR சொல்வது என்ன?

தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்திருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது ஆ... மேலும் பார்க்க

சிக்கன் கேட்டதால் அடி; 7 வயது மகன் உயிரிழப்பு - தாய் கைது

மும்பை அருகில் உள்ள பால்கர் காசிபாடாவில் வசிப்பவர் பல்லவி. இவருக்கு 7 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவரது 7 வயது மகன் வீட்டில் சிக்கன் குழம்பு வைக்... மேலும் பார்க்க

சென்னை: காதல் ஜோடியை மிரட்டிய கும்பல் - ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், படப்பையை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மணிமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து ப... மேலும் பார்க்க