வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை - கயிற்றால் கட்டி, வனத்துறையிடம் ஒப்படைத்த சிங்கப்பெண்!
நள்ளிரவு வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை
பெண்கள் சில நேரங்களில் எதையும் எதிர்த்து போராடும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பவர். எதாவது ஆபத்து வரும் போதுதான் அவர்களின் துணிச்சல் வெளியில் தெரிய வரும்.
பல பெண்கள் தங்களது குழந்தைகளை பாதுகாக்க சிறுத்தையை எதிர்த்து போராடி இருக்கின்றனர். ராஜஸ்தானில் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

உதைப்பூரில் வசிக்கும் சுசித்ரா என்ற பெண்ணின் வீட்டிற்குள் இரவில் சிறுத்தை ஒன்று நுழைந்துவிட்டது. வீட்டிற்குள் தனியாக இருந்த பெண் சுசித்ரா சிறுத்தை வீட்டிற்குள் நுழைந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் சிறுத்தையை கண்டு அச்சம் அடையாமல் சிறுத்தையை எதிர்த்து போராடினார்.
அவர் சிறுத்தையுடன் போராடி அதனை கயிற்றால் கட்டிப்போட்டார். சிறுத்தையில் காலில் கயிற்றை கட்டி வீட்டில் கட்டி வைத்தார்.
சிறுத்தை கயிற்றை இழுத்துக்கொண்டு வெளியில் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகப் பரவியது.
அப்பெண் கயிற்றால் சிறுத்தையைக் கட்டிப்போட்டுவிட்டு வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தார். அவர்கள் வந்து சிறுத்தையைப் பத்திரமாக அழைத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

அப்பெண்ணின் துணிச்சலான செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி இருக்கின்றனர்.
ஒருவர் தனது பதிவில், "மிகவும் துணிச்சலான பெண்" என்று புகழ்ந்திருக்கிறார். மற்றொருவர் "சிறப்பான பணி" என்றும், "வேறு யாராவது அதனை வீட்டிற்கு வெளியில் பார்த்திருந்தால் கொன்றிருப்பார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் "சாதாரணப் பெண்களின் சக்தியைப் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் தனது பதிவில், "தவறான வீட்டிற்குள் அது நுழைந்துவிட்டது" என்று சிரித்தபடியே சொல்லியிருக்கிறார்.
மற்றொருவர் தனது பதிவில், "சிறுத்தையைக் கயிற்றால் கட்டிப்போட்ட பெண்ணின் கணவர் நிலையை நினைத்துப் பாருங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
பலரும் அப்பெண் எப்படி அமைதியாகவும், துணிச்சலுடனும் நிலைமையைக் கையாண்டார் என்று ஆச்சரியம் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இதே ராஜஸ்தானில் வீட்டிற்கு வெளியில் படுத்திருந்த சிறுத்தைக்குப் பெண் ஒருவர் ராக்கி கயிறு கட்டினார்.
For ages, man & animal in India have lived in harmony with unconditional love to the wild.
— Susanta Nanda IFS (Retd) (@susantananda3) August 12, 2022
In Rajasthan, a lady shows this unfettered love to our wild by tying a Rakhi(symbol of love & brotherhood ) to an ailing Leopard before handing over to Forest Department.
(As received) pic.twitter.com/1jk6xi1q10