செய்திகள் :

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பு?

post image

Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்கள். ஆரோக்கியமான நபர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது?

-ராஜா, விகடன் இணையத்திலிருந்து

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள்நலம் மற்றும் நீரிழிவு சிகிச்சை மருத்துவர் சஃபி

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

இது சர்க்கரைநோய் குறித்த புரிந்துணர்வு இல்லாமல் கேட்கப்பட்ட கேள்வியாகத் தெரிகிறது.

எந்தப் பிரச்னையும் இல்லாத, ஆரோக்கியமான ஒரு நபர், சராசரியாக ஒரு நாளைக்கு 6 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பது இயல்பு.

அதுவும் அந்த நபர், ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்கக்கூடிய நபராக இருந்தால் இது இயல்பாக நடக்கும்.

நீரிழிவு பாதித்த ஒரு நபர், அதிக அளவிலும் அடிக்கடியும் சிறுநீர் கழிப்பது ஏன் என்பதை கவனிக்க வேண்டும்.  அவர் சாதாரண நபரைவிடவும் அதிக முறை சிறுநீர் கழிக்க வாய்ப்பு உண்டு. அதற்கு 'கிளைக்கோசூர்யா' (Glycosuria) என்று பெயர்.

உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாகும்போது, அந்த குளுக்கோஸானது, செல்களுக்குள் உள்ள நீரை எல்லாம் வெளியே எடுத்து, அதிக அளவில் சிறுநீரை உருவாக்குவதால்தான், சர்க்கரைநோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கிறது. 

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்காது.

கிளைக்கோசூர்யா என்ற நிலை, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் 'பாலியூரியா' (Polyuria) என்ற நிலையை உருவாக்கும்.  நீரிழிவு பாதித்த ஒருவர், தன் ரத்தச் சர்க்கரை அளவை எந்த அளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பது இதில் முக்கியம். 

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்பட்சத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை இருக்காது.

அப்படி கட்டுப்பாட்டில் இல்லாமல் போகும்போது, சராசரியாக ஒரு நாளைக்கு 6 முறை சிறுநீர் கழிக்கும் நிலையானது, 12 முறையாக மாறலாம். இரவிலும் பலமுறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கலாம்.

சர்க்கரை நோய்
சர்க்கரை நோய்

உயர் ரத்த அழுத்தத்துக்காக மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கும், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அதேபோல சிறுநீர்ப் பையில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தாலும், அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீர் வெளியேறலாம்.

ஆண்களைப் பொறுத்தவரை புராஸ்டேட் பாதிப்பு இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி வெளியேறலாம். எனவே, அடிக்கடி சிறுநீர் வெளியேற்றுபவர்கள், அதற்கான காரணத்தை மருத்துவரை அணுகித் தெரிந்துகொண்டு, சரியான சிகிச்சையைப் பின்பற்றுவதே சரி.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

`டீன் ஏஜ் ஆண் குழந்தைகளுக்கான உணவுகள்' - பரிந்துரை செய்யும் நிபுணர்

''பெண் குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்போதே, அவர்களுக்குக் கொடுக்கப்படும் உணவில் அம்மாக்களின் கவனம் கூடும். பருவமடைந்த பின்னர், அவர்களது கர்ப்பப்பையைப் பலப்படுத்தும் உணவுகள் அவர்களுக்குக் கொடுக்கப்படு... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெறும் தரையில் படுத்தால் ரத்தம் சுண்டிப்போகுமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் வெறும் தரையில் படுத்துத்தூங்கிதான் பழக்கம். ஆனால், ஊரிலிருந்துவந்த உறவினர், வெறும் தரையில் படுத்துத்தூங்கினால் ரத்தமெல்லாம் சுண்டிப்போய் விடும் என்றும் அதைத் தவிர்க்கு... மேலும் பார்க்க

காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்

காலை முதல் இரவுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நம் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. பல் துலக்குவது தொடங்கி இரவில் உறங்கச் செல்வதுவரை ஒவ்வொன்றுக்கும் சில வரையறைகள் உள்ளன. அவற்றை மீறாமல் அந்தச் செயல்கள... மேலும் பார்க்க

Doctor Vikatan: நெஞ்சுவலி, இசிஜி நார்மல்; அதைத்தாண்டி இன்னொரு டெஸ்ட் அவசியமா?

Doctor Vikatan:நான் 50 வயது பெண். எனக்கு சமீபத்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மருத்துவரை சந்தித்தேன். இசிஜி பரிசோதனையில் எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆனாலும், ட்ரோபோனின் என்ற பரிசோதனை செய்யச் சொன்னார்கள். ... மேலும் பார்க்க

Doctor Vikatan: சமையலில் தவிர்க்க முடியாத வெங்காயம்; சுவைக்கா, ஆரோக்கியத்திற்கா?

Doctor Vikatan: பல வீடுகளிலும் வெங்காயம் என்பது அன்றாட சமையலில் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. வெங்காயத்தில் சல்பர் தவிர வேறு சத்துகள் இருக்கின்றனவா, வெங்காயத்தைச் சுவைக்காகச் சேர்த்துக்கொள்கிறோமா அல... மேலும் பார்க்க

எங்கு பார்த்தாலும் காய்ச்சல்; இது சீசனல் காய்ச்சலா, பயப்படணுமா?

’’இது காய்ச்சல் காலம். வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்கப் போற நேரத்துல, இந்த மாதிரி காய்ச்சல் வர்றது வருஷம்தோறும் வழக்கமா நடக்குற விஷயம்தான். அதனால யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்று எல்லோருக்கும் தைரியம் ... மேலும் பார்க்க