செய்திகள் :

ட்ரம்ப் பரிந்துரைகள்: `ஓகே' சொன்ன நெதன்யாகு; ஹமாஸ் பதில்? அந்த 20 பரிந்துரைகள் என்ன? | முழு விவரம்

post image

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவை நெருங்கிவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில், இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தி வந்தது.

இந்த மாதம் தரைவழித் தாக்குதலையும் தொடங்கியது. இதுவரை இஸ்ரேலின் தாக்குதலால் பாலஸ்தீனத்தில் 66,000 பேர் உயிரிழந்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.

இஸ்ரேலின் தாக்குதல் நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக்கொண்டு போக, உலக நாடுகள் கடுமையான எதிர்ப்புகளை எழுப்பின.

கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்கத் தொடங்கின. இவை எல்லாம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு கடும் நெருக்கடியாக மாறியது.

நெதன்யாகு
நெதன்யாகு

நெதன்யாகுவின் பாலஸ்தீனத்தின் மீதான கொடூரத் தாக்குதலால், அவர் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது.

அப்போது ட்ரம்ப் பரிந்துரைத்த 20 போர் நிறுத்தப் பரிந்துரைகளை நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இவற்றை ஹமாஸ் ஒப்புக்கொள்ளுமா என்பது தெரியவில்லை.

ட்ரம்ப் பரிந்துரைத்து, நெதன்யாகு ஒப்புக்கொண்ட 20 போர் நிறுத்த பரிந்துரைகள் இதோ:

1. இனி காசா தீவிரவாதம் இல்லாத ஒரு பகுதியாகவும், பக்கத்து நாடுகளுக்கு அச்சுறுத்தல் இல்லாததாகவும் மாறும்.

2. ஏற்கெனவே மிகவும் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது மாதிரி காசா மறுகட்டமைக்கப்படும்.

3. இஸ்ரேல், ஹமாஸ் இரு பக்கமும் இந்தப் பரிந்துரைகளுக்கு ஒப்புக்கொண்டால், உடனே போர் நிறுத்தம் ஏற்படும்... தாக்குதல்கள் நிறுத்தப்படும்.

4. இஸ்ரேல் இந்தப் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட 72 மணிநேரத்தில், ஹமாஸ் அனைத்து இஸ்ரேல் பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும். (அவர்கள் உயிரோடு இருந்தாலும் சரி... இறந்திருந்தாலும் சரி)

5. ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவித்தவுடன், அக்டோபர் 7, 2023-கு பிறகு, கைது செய்த 1,700 காசா மக்களை இஸ்ரேல் விடுவிக்கும். இறந்த இஸ்ரேல் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒவ்வொரு உடலுக்கு, இறந்த 15 காசா மக்களை இஸ்ரேல் ஹமாஸிடம் ஒப்படைக்கும்.

ஹமாஸ்
ஹமாஸ்

6. ஆயுதங்களை விட்டு, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் ஹமாஸ்களுக்கு மன்னிப்பு வழங்கப்படும். அவர்கள் காசாவை விட்டு நீங்கி, எந்த நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறதோ, அங்கே பத்திரமாக அனுப்பப்படுவார்கள்.

7. போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஒப்புக்கொண்ட உடனே, காசாவிற்குள் மிகப்பெரிய அளவிலான உதவிகள் உள்நுழையும். இதில் தண்ணீர், மின்சாரம், மருத்துவ உதவி போன்றவற்றை அடங்கும். இது ஜனவரி 19, 2025-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது போல இருக்கும்.

8. இந்த உதவிகள் இரு பக்கத்திற்கும் நடுநிலையான ஐ.நா, செஞ்சிலுவை போன்ற அமைப்புகளால் வழங்கப்படும். இந்த உதவிகளுக்காக ரஃபா கிராசிங் (எகிப்து - காசா எல்லை) திறக்கப்படும்.

9. காசா தற்காலிகமாக பாலஸ்தீனிய தொழில்நுட்பக் குழுவால் (அரசியல் சாராத நிபுணர்கள்) நடத்தப்படும். அவர்கள் தண்ணீர், மின்சாரம்... போன்ற அன்றாட தேவைகளைக் கவனித்துக் கொள்வார்கள். 

இவர்களது செயல்பாட்டை அதிபர் ட்ரம்ப் தலைமையிலான புதிய சர்வதேச அமைப்பு 'சமாதானக் குழு' கண்காணிக்கும். இந்த அமைப்பில் பிற உலக நாடுகளின் தலைவர்களும் இருப்பார்கள்.

பாலஸ்தீனம் சீர்திருத்தப்பட்டு பொறுப்பேற்கத் தயாராகும் வரை, இந்த அமைப்பு நிதி, நிர்வாகம் மற்றும் மறுவளர்ச்சியை நிர்வாகிக்கும்.

10. ட்ரம்ப் தலைமையிலான வளர்ச்சித் திட்டம் காசாவில் அறிமுகப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடு ஈர்ப்பு, மறுகட்டமைப்பு போன்றவை அடங்கும்.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்
இஸ்ரேல்-ஹமாஸ் போர்

11. காசாவிற்குள் சிறப்பு வர்த்தக மண்டலம் உருவாக்கப்படும். இங்கே சந்தைகளுக்குள் நுழைய சிறப்பு அனுமதி, குறைந்த வரி போன்றவை வழங்கப்படும். மேலும், பிற நாடுகளிடம் பேசி பிசினஸ் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.

12. காசாவில் இருந்து வெளியேறுமாறு யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். மக்கள் அவர்களுக்கு வேண்டும்போது செல்லலாம், திரும்ப வரலாம். மக்களை காசாவில் இருக்க வைப்பதும், காசாவை மறுகட்டமைப்பதும் தான் முக்கிய நோக்கம்.

13. இனி காசாவின் அரசாங்கத்தில், ஹமாஸிற்கோ, பிற தீவிரவாத அமைப்புகளுக்கோ அனுமதி இல்லை. அனைத்து தீவிரவாத மற்றும் ராணுவ கட்டமைப்புகளும் அழிக்கப்படும். மீண்டும் கட்டப்படாது. இந்த அழித்தலை ஒரு சுதந்திர அமைப்பு கண்காணிக்கும்.

14. ஹமாஸும், பிற பிரிவுகளும் அவர்களது உறுதியைக் காப்பாற்றுவதும், காசா அமைதியாக இருப்பதையும், பிறருக்கு அச்சுறுத்தலாக இல்லாததையும் பக்கத்து நாடுகள் உறுதி செய்யும்.

15. சர்வதேச நிலைத்தன்மைப் படை காசாவிற்கு அனுப்பப்படும். அவர்கள் பாலஸ்தீனத்தின் போலீஸ்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். பாலஸ்தீன போலீஸ்கள் அனுபவமிக்க ஜோர்டன் மற்றும் எகிப்து நாட்டு போலீஸ்களுடன் பணியாற்றுவார்கள். காசா எல்லைகளைப் பாதுகாக்க இந்தப் படை இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் ஒத்துழைக்கும். இந்த அமைப்பு ஆயுதக் கடத்தல்களைத் தவிர்க்கும்.

Gaza Israel war
Gaza Israel war

16. இனி இஸ்ரேல் காசாவை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆக்கிரமிக்காது. இஸ்ரேல் படைகள் கொஞ்சம் கொஞ்சமாக காசாவை விட்டு நீங்கும். காசாவில் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதியாகும் வரை, இஸ்ரேல் தற்காலிக பாதுகாப்புப் படையை காசாவில் வைத்திருக்கும்.

17. ஹமாஸ் இந்தப் பிளானை மறுத்தாலோ, தாமதப்படுத்தினாலோ, ஏற்கனவே IDF-லிருந்து ISF-க்கு மாற்றப்பட்ட பகுதிகளில் உதவி மற்றும் மறுகட்டமைப்பு இன்னும் முன்னேறும்.

18. பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை ஏற்பாடு செய்யப்படும். அது சகிப்புத்தன்மை போன்ற இலக்குகளை மையப்படுத்தி இருக்கும்.

19. காசா மறுகட்டமைக்கப்பட்டவுடன், பாலஸ்தீனம் வெற்றிகரமாக சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னர், பாலஸ்தீனத்திற்கு நாடு என்கிற அந்தஸ்து வழங்கப்படும்.

20. இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கு இடையேயான புதிய உரையாடல்களை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்யும்.

`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யாகு புகழாரம்

நேற்று அமெரிக்க வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் - நெதன்யாகு சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் - காசா போர் நிறுத்தத்திற்கு ஒப்புகொண்டுள்ளார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. இதற்காக... மேலும் பார்க்க

Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK DMK |Imperfect Show

* கரூர் கூட்ட நெரிசல்: பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு; தொடர் உயிரிழப்பால் சோகம் * கரூர் மரணங்கள் : அங்குலம் அங்குலமாக ஆய்வு, விசாரணையை தொடங்கிய அருணா ஜெகதீசன். * கரூர் துயர சம்பவம் - புதிய விசாரணை அதிகாரி... மேலும் பார்க்க

விழுப்புரம்: `கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியும், போலீஸும்தான் காரணம்!’ – தவெக நிர்வாகி தற்கொலை

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரசாரத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு; தவெக மாவட்டச் செயலாளர் கைது; போலீஸார் விசாரணை!

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று முன்தினம் மேற்கொண்ட அரசியல் சுற்றுப்பயண பிரசாரத்தில், 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இச... மேலும் பார்க்க