செய்திகள் :

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

post image

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு இன்று(செப்.30) காலை 6723 கன அடியிலிருந்து வினாடிக்கு 6111 கன அடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.14 அடியிலிருந்து 117.60 அடியாக குறைந்தது.

அணையின் தற்போதைய நீர் இருப்பு 89.69 டிஎம்சியாக உள்ளது.

Water inflow to Mettur Dam is low!

இதையும் படிக்க... பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

தங்கம் விலை மேலும் உயர்ந்தது! இன்று எவ்வளவு?

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று ஒரேநாளில் தங்கம் சவரனுக்கு ரூ.1,140 உயர்ந்துள்ளது.இந்நிலையில் இன்ற... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் சம்பவம்: வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

கரூர் நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பிய பிரபல யூடியூபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள காலை... மேலும் பார்க்க

கரூர் மாவட்டச் செயலாளரிடம் 10 மணி நேரமாக விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த மாவட்டச் செயலாளர் மதியழகனிடம் 10 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் பலி சம்பவம்: மற்றொரு தவெக நிர்வாகி கைது!

கரூர் நெரிசல் பலி சம்பவத்தில் மற்றொரு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப்.27) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச... மேலும் பார்க்க

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி என தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சர்ச்சைப் பதிவு ஒன்றை பதிவிட்டு சில நிமிடங்களிலேயே நீக்கியுள்ளார்.கரூர் வேலுச்சா... மேலும் பார்க்க

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுதபூஜை... மேலும் பார்க்க