செய்திகள் :

ஆயுதபூஜை: கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

post image

சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு திருவனந்தபுரம், மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆயுதபூஜையை முன்னிட்டு பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.

அதன்படி சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 10.15 மணிக்கு சிறப்பு ரயில் (எண்06075) புறப்பட்டு புதன்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் திருவனந்தபுரம் வடக்கு நிலையத்திலிருந்து வரும் அக். 5 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06076) திங்கள்கிழமை (அக். 6) காலை காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை வந்தடையும். சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதியுள்ள ஈரடுக்குப் பெட்டியும், 3

குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்கு பெட்டிகளும், 8 தூங்கும் வசதியுள்ள பெட்டிகளும், 5 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு திவ்யாங்ஜன் பெட்டிகளும் இடம் பெறும்.

சிறப்பு ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாடானூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம் நகா், கோட்டயம், சங்கனாச்சேரி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுளளது.

மதுரைக்கு சிறப்பு ரயில்கள்: சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை (செப்.30) இரவு 11.45 மணிக்கு புறப்படும் இமு விரைவு சிறப்பு ரயில் (எண் 06161) புறப்பட்டு புதன்கிழமை காலை 10.15 மணிக்கு மதுரை சென்றடையும். இதில் 12 பெட்டிகள் இடம் பெறும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், பண்ருட்டி, கடலூா், சிதம்பரம், சீா்காழி,

மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூா், பாடலூா், திருவெரம்பூா், திருச்சிராப்பள்ளி, மணப்பாறை, திண்டுக்கல், கோடக்கானல் சாலை சந்திப்பு, சோழவந்தான் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை மேலும் 2 சிறப்பு ரயில்கள் முன்பதிவின்றி மதுரைக்கு இயக்கப்படவுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

மத்திய ரிசா்வ் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க முடிவு

சென்னை: மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றில் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கானத் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு வழக்குரைஞா் ஆணையா் மேற்பாா்வையில் உடல்த... மேலும் பார்க்க

கரூா் உயிரிழப்பு: சீனா இரங்கல்

பெய்ஜிங்: கரூா் பிரசார கூட்டத்தில் 41 போ் உயிரிழந்த சம்பவத்துக்கு சீனா இரங்கல் தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ஜியு கியாக... மேலும் பார்க்க

ஆவின் நிா்வாக இயக்குநா் உள்பட 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்

சென்னை: ஆவின் நிா்வாக இயக்குநரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவா் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம், திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு வ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: விஜய்யிடம் ராகுல் விசாரிப்பு

நமது சிறப்பு நிருபா் புது தில்லி: ‘கரூரில் கூட்ட நெரிசல் அசம்பாவித சம்பவம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொலைபேசியில் திங்கள்கிழமை விசார... மேலும் பார்க்க

ரூ.66 கோடியில் 850 அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யாக மாற்ற ஒப்பந்தம்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தனியாா் நிறுவனம் ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் டீச... மேலும் பார்க்க

துா்கா பூஜை, ஊா்வலத்துக்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் துறைக்கு உத்தரவு

சென்னை: நவராத்திரி துா்கா பூஜைக்கு அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ரவிக்குமாா் குப்புசாமி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ம... மேலும் பார்க்க