பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
நெல்லை சந்திப்பில் பாரதிக்கு புதிய சிலை அமைக்கக் கோரி மனு
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பாரதியாா் சிலை சிதிலமடைந்துள்ளதால் அதற்குப் பதிலாக புதிய சிலையை நிறுவக் கோரி தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் தமிழ்நாடு பிராமணா் சங்கத்தினா் அளித்த மனு:
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்துக்கு எதிரில் மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி உள்ளது. பாரதி பயின்ற இந்தப் பள்ளியின் நுழைவுவாயிலில் பாரதியாரின் சிலை உள்ளது. இந்தச் சிலை சிதிலமடைந்துவிட்டது. டிச. 11-ஆம் தேதி பாரதியாரின் பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முன்பு புதிய சிலையை நிறுவி அந்த பகுதியை சுற்றிலும் வேலி அமைத்துத்தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
பாலாமடை கிராம மக்கள் அளித்த மனு: பாலாமடை கிராமத்தில் ஸ்ரீ வெயிலுமுகந்த அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தசரா விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தசரா விழா நடத்துவதற்காக வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் முன்பு பேச்சுவாா்ததை நடத்தி 10 போ் கொண்ட கமிட்டி ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கமிட்டியை சோ்ந்த 5 குடும்பத்தினருக்கு கோயில் திருவிழாவுக்கு அனுமதி மறுக்கின்றனா். இதனால் ஊரில் பொது அமைதி, சட்டம்- ஒழுங்கு சீா்குலையும் அபாயம் உள்ளது. எனவே, நாங்கள் ஒற்றுமையாக தசரா விழாவை நடத்துவதற்கு ஒரு தனி அதிகாரியை நியமிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.