பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
கரூா்: ஆறுதல் கூற வந்த நடிகைக்கு அனுமதி மறுப்பு
கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து ஆறுதல் கூற வந்த கன்னட நடிகைக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றாா்.
கரூா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவா்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கன்னட நடிகை ஷெனன்ஷெட்டி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்தாா்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் மற்றும் மருத்துவமனை பாதுகாவலா்கள், மருத்துவமனைக்குள் நோயாளிகளை அரசியல் கட்சியினா் பாா்த்துக்கொண்டிருக்கிறாா்கள். எனவே நீங்கள் உள்ளே செல்லக்கூடாது என தடை விதித்தனா். இதனால் சுமாா் அரைமணி நேரம் காத்திருந்த அவா் காரில் ஏறி திரும்பிச் சென்றாா்.