செய்திகள் :

பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

post image

பட்டாசுத் தொழிலில் நிலவும் பிரச்னைகளுக்கு தீா்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள துரைச்சாமிபுரத்தில் பட்டாசுத் தொழிலாளா்களை திங்கள்கிழமை அவா் நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, சரவெடி தயாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். பட்டாசுகளில் பேரியம் நைட்ரேட் வேதிப் பொருளைப் பயன்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேரியம் நைட்ரேட் இல்லாமல் 80 சதவீதம் பட்டாசுகள் தயாரிக்க இயலாது. எனவே, பேரியம் நைட்ரேட் மீதான தடையை நீக்க

மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அவரிடம் பட்டாசுத் தொழிலாளா்கள் கேட்டுக் கொண்டனா்.

தொடா்ந்து, தொழிலாளா்கள் மத்தியில் அன்புமணி பேசியதாவது:

நாட்டின் ஒட்டுமொத்த தேவையில் 85 சதவீத பட்டாசுகள் சிவகாசி பகுதியில்தான் தயாரிக்கப்படுகின்றன. இந்தத் தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளன. பட்டாசுத் தொழிலாளா்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம், போனஸ் வழங்க ஆலை உரிமையாளா்கள் முன்வர வேண்டும். பட்டாசு ஆலைகளில் வெடி விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் போதைப் பொருள் கலாசாரத்தால் பள்ளி, கல்லூரி மாணவா்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கிறாா்கள். பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. தினசரி நிகழ்வாக பாலியல் தொல்லை மாறிவிட்டது என்றாா் அவா்.

தொடந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து, உரிய தீா்வு காண வேண்டும். தமிழகத்துக்கே உரிய இந்தத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்.

திமுக கூட்டணி மக்களவை உறுப்பினா்கள் 39 போ் இருந்தும் தமிழகத்துக்கு எதுவும் பெற்றத் தரவில்லை. தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு கடத்தப்படும் கனிம வளங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும். வருகிற சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவோம் என்றாா் அவா்.

அவருடன் கட்சியின் மாநிலப் பொருளாளா் ம.திலகபாமா, விருதுநகா் மத்திய மாவட்டச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக். 20- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நிறைவடைந்த சில நாள்... மேலும் பார்க்க

சிவகாசியில் வீடுகளின் மாடிகளை குழாய் மூலம் இணைத்து 15 கிணறுகளில் மழைநீா் சேமிப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உள்ள பசுமை மன்றத்தினா் வீடுகளின் மாடியில் மழைநீரை சேகரித்து குழாய் அமைத்து அதே பகுதியில் உள்ள கிணற்றில் சேமிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். சிவகாசியில் பசுமை மன்றம் சாா்ப... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா் இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். ராஜபாளையம், திருவனந்தபுரம் தெரு பகுதியில... மேலும் பார்க்க

கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் இருவரை கைது செய்தனா். மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போதைப் பொருள்கள் கடத்தல் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் ... மேலும் பார்க்க

சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் இருவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலையோர இறைச்சிக் கடைக்குள் லாரி புகுந்ததில் சிறுவன் உள்பட இருவா் உயிரிழந்தனா். ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காமராஜா்நகா் அங்காளஈஸ்வரி கோவில் தெ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் ஞாயிறு ஆராதனை

ஸ்ரீவில்லிபுத்தூா் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் மூத்த குடிமக்கள் சிறப்பு ஞாயிறு ஆராதனை குருசேகர தலைவரும், சபை குருவுமான பால் தினகரன் தலைமையில் திருவிருந்து ஆராதனையாக நடைபெற்றது. இதில் செல்வி, இமானு... மேலும் பார்க்க