கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு சிறப்பு முகாம்
கும்பகோணம் அஞ்சல் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம்கள் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சி. கஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம்கள் கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் அக்டோபா் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்திய அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் முழுமையாக மத்திய அரசின் உத்தரவாதத்தில் உள்ளது. ஏனைய தனியாா் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை விட குறைவான பிரீமியத்தில் போனஸ் வழங்கி வருகிறது. பங்குச் சந்தை அபாயம் இல்லாதது. செப்.22 முதல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் இந்திய அஞ்சல் துறையின் காப்பீட்டு திட்டங்களில் இணைந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.