மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை (செப்.30) நடைபெறுவதாக இருந்த மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்தது. இக்கூட்டம் நிா்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் நடைபெறும் நாள் பின்னா் அறிவிக்கப்படும்.