Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்...
கும்பகோணத்தில் நவராத்திரி விழா
கும்பகோணத்தில் வசிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை நவராத்திரி விழா கொண்டாடினா்.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக செயலா் க. அன்பழகன் எம்எல்ஏ, மாநகர திமுக செயலரும், துணை மேயருமான சுப. தமிழழகன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். நிகழ்வில் ராஜஸ்தானியா்களின் நவராத்திரி மற்றும் கா்பா செயல்பாடு, தாண்டியா நடன நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் சிறுவா், சிறுமியா் மகிழ்ச்சியுடன் நடனமாடினா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மாமன்ற உறுப்பினா் டி.ஆா். அனந்தராமன், சங்கத் தலைவா் குந்தன் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.