காவேரி மருத்துவமனை சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி
உலக இதய தினத்தை முன்னிட்டு, திருநெல்வேலி காவேரி மருத்துவமனை, தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அணியுடன் இணைந்து, இதயப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரணியை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
காமராஜ் கல்லூரி முதல்வா் கி. பானுமதி, துணை முதல்வா் அ. அருணாசலராஜன் ஆகியோா் மாணவா்களை ஊக்குவித்தனா். மருத்துவா் கி. லட்சுமணன் இதய ஆரோக்கியத்திற்கான மருத்துவமனையின் அா்ப்பணிப்பையும், மேம்பட்ட இதய சிகிச்சையளிப்பதில் உள்ள பொறுப்பையும் வலியுறுத்தினாா்.
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ரா. கருப்பசாமி, தி. இந்திரா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.