குலசேகரன்பட்டினத்தில் இலவச மருத்துவ முதலுதவி முகாம் திறப்பு
குலசேகரன்பட்டினம் ஜே.ஜே. மிராக்கிள் மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முதலுதவி மையத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாம் பொறுப்பாளா் ஜெபமலா் ஜான்வின்சென்ட் தலைமை வகித்தாா். மருத்துவா் சோபியா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் பங்கேற்று மருத்துவ மையத்தை திறந்து வைத்தாா்.
உடன்குடி ஒன்றிய திமுக செயலா்கள் பாலசிங், இளங்கோ, உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவா் மால்ராஜேஷ், திமுக மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.