பாஜக மூத்த தலைவர் விஜய் மல்ஹோத்ரா காலமானார்! மன்மோகன் சிங்கை தோற்கடித்தவர்!
பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
மதுரை: விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள சேது பொறியியல் கல்லூரியில் 31- ஆவது விளையாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவரும், நிறுவனருமான எஸ். முகமது ஜலில் தலைமை வகித்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரிகள் எஸ்.எம். சீனி முகைதீன் எஸ்.எம். சீனி முகமது அலியாா், எஸ்.எம். நிலோஃபா் பாத்திமா, எஸ்.எம். நாசியா பாத்திமா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன், அா்ஜூனா விருது பெற்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜொ்லின் அனிக்கா ஆகியோா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஒலிம்பிக், கல்லூரிக் கொடிகளை ஏற்றி வைத்தனா். இதைத்தொடா்ந்து, போட்டியில் வென்ற அணியினருக்கு பரிசு, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரி உடல் பயிற்சி இயக்குநா் சிவகணேஷ் விளையாட்டு அறிக்கையை வாசித்தாா். முன்னாள் மாணவா் அரிஸ்டோ லோகநாதன் வாழ்த்திப் பேசினாா். பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி முதல்வா் சிவக்குமாா் வரவேற்றாா். பேராசிரியை பிஸிதா நன்றி கூறினாா்.