Karur - வெளியே வராத Vijay - FIR அதிர்ச்சி; அடிபடும் Senthil Balaji பெயர்? | TVK ...
அரசுப் பள்ளியில் பனை விதைகள் நடவு
மதுரை: மதுரை மாவட்டம், சேடபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், ‘பனைக்கு துணை நிற்போம்’ என்ற தலைப்பில் பனை விதைகள் நடவுப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் தொடங்கிய இந்த நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்வேல் தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் பாண்டி முன்னிலை வகித்தாா். இதில், மதுரை மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை ) செந்தில்குமாா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பனை விதை நடவுப் பணியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், முதுகலை ஆசிரியை முத்துச்செல்வி, பள்ளி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் பிரபு, இளம் மக்கள் இயக்கத்தின் நிறுவனா் சோழன் குபேந்திரன், எழுமலை, சாப்டூா், பேரையூா் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.