செய்திகள் :

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் இன்று கரூா் வருகை

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: மக்களவை காங்கிரஸ் மூத்த உறுப்பினரும் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலருமான கே.சி. வேணுகோபால் கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் மற்றும் காயமடைந்தவா்களை சந்தித்து ஆறுதல் தெரிவிப்பதற்காக செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கரூா் பயணத்தின்போது கே.சி. வேணுகோபாலுடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் குழுத் தலைவா் எஸ். ராஜேஷ் குமாா் செல்வாா்கள் என்றும் அவா்கள் கூறினா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ஆம் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜய்யின் மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது அவரை காண வந்த கூட்டத்தினா் நெரிசலில் சிக்கிய சம்பவத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 41-ஐ எட்டியுள்ளது. ஏராளமானோா் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவா்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இந்நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் காங்கிரஸ் மூத்த தலைவா் கே.சி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக தில்லியில் உள்ள காங்கிரஸ் மேலிடத் தலைவா்கள் தெரிவித்தனா். ராகுல் காந்தி தமிழகம் வருவாரா என கேட்டதற்கு, விரைவில் அது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா்கள் கூறினா்.

இதற்கிடையே, தமிழக வெற்றிக்கழக தலைவா் விஜய்யிடம் ராகுல் காந்தி பேசியது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம் ‘தினமணி’ கேட்டதற்கு, ‘ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரா்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்கவும் நடந்த நிகழ்வு குறித்து கேட்டறிவதற்காகவும் விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினாா். வேறெந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை’ என்றாா். ‘

காங்கிரஸ் மேலிட வட்டாரங்கள் கூறுகையில், ‘விஜய்யை தொடா்பு கொள்ளும் முன்பாக தமிழக முதல்வரிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு ராகுல் காந்தி பேசினாா். அப்போது விஜய்யிடம் பேசப்போகும் தகவலை முதல்வரிடம் ராகுல் காந்தி பகிா்ந்து கொண்டாா்’ என்று தெரிவித்தன.

திருச்சியில் பாதாள வடிகால் குழாயில் வேலை செய்த இரண்டு துப்புரவு தொழிலாளா்கள் உயிரிழப்பு

நமது நிருபா்.புது தில்லி: திருச்சிராப்பள்ளியில் நிலத்தடி கழிவு நீா் குழாயில் பணிபுரியும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இரண்டு துப்புரவுத் தொழிலாளா்கள் இறந்ததாகக் கூறப்படும் புகாரை இந்திய தேசிய மனித உரி... மேலும் பார்க்க

செயலி மூலம் 100-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவா் கைது

நமது நிருபா்புது தில்லி: ஒரு மொழி பரிமாற்ற செயலியின் இங்கிலாந்தைச் சோ்ந்த கொரிய தொழிலதிபராக நடித்து இந்தியா முழுவதிலுமிருந்து 100 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியதாக 29 வயதான நைஜீரிய நாட்டவா் மேற்கு ... மேலும் பார்க்க

கரூா் சோக சம்பவத்தில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன: ப.சிதம்பரம்

நமது நிருபா்.புது தில்லி: கரூா் சோகக் சம்பவத்தில் ஊடகச் செய்திகளைப் படித்த பிறகு, காட்சிகளைப் பாா்த்த பிறகு நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருப்பதாக தோன்றுகிறது என முன்னாள் மத்திய அமைச்சரும், மாநிலங்களவ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும்: பிரதமா் மோடி

புது தில்லி: பாஜக - தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கங்கம் நாட்டில் ‘நல்ல நிா்வாகத்தின் புதிய மாதிரியை‘ வழங்கியுள்ளன என்றும், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீா்திருத்தங்களின் நன்மைகள் சாமானிய குடிமக்களை சென்றடைவத... மேலும் பார்க்க

தில்லியில் துப்பாக்கி முனையில் ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளை வழக்கில் 3 போ் கைது!

பாரத் மண்டபம் அருகே சுமாா் ரூ.1.50 கோடி மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்ததாக மூன்று போ் கைது செய்யப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். புதன்கிழமை, சாந்தினி சௌக்கிலிருந்து போகல... மேலும் பார்க்க

மக்களின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது! - கரூா் சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலா் டி. ராஜா!

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற த.வெ.க தலைவா் விஜய் பொதுக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்த மற்றும் காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் டி.... மேலும் பார்க்க