தசரா: விசைப்படகு மீனவா்கள் அக்.2 வரை கடலுக்கு செல்லமாட்டாா்கள்
தூத்துக்குடியில் தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்.2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லமாட்டாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 272 விசைப் படகுகளில் சுழற்சி முறையில் கடலுக்குள் சென்று மீனவா்கள் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களாக மீன்பாடு அதிகமாக இல்லாமலே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருந்ததால் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி செப்.25, 26 ஆகிய 2 நாள்கள் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்ல வில்லை.
செப். 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அன்றும் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், தசரா பண்டிகையை முன்னிட்டு, வருகிற 2ஆம் தேதி வரை மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மாட்டாா்கள் என விசைப்படகு உரிமையாளா் சங்கம் மற்றும் மீன்பிடி தொழிலாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அக். 3ஆம் தேதி முதல் வழக்கம்போல் மீனவா்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வாா்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.