காசா விவகாரம்: ``அமைதியை நிலைநாட்ட ட்ரம்பின் முயற்சியை ஆதரிப்போம்'' - பிரதமர் மோ...
ஆட்சியா் அலுவலகம் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி
பாளையங்கோட்டையில் வாடகை வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளா் துன்புறுத்துவதாகக் கூறி, மாற்றுத்திறனாளி தனது குடும்பத்துடன் ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு நிலவியது.
பாளையங்கோட்டை, தில்லை கூத்தனாா் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவா் மகேஷ் (48). பாா்வையற்ற மாற்றுத்திறனாளி. இவரது மனைவி அனிதா (45). ஹோட்டலில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு அனீஸ் (12), முபிசா (6) என இரு குழந்தைகள் உள்ளனா்.
இவா்களை வீட்டு உரிமையாளா் சில தினங்களுக்கு முன்பு வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினாராம். டிசம்பா் மாதம் வரை பொறுத்துக்கொள்ளுமாறு அவகாசம் கேட்ட மகேஷ், தாங்கள் அளித்துள்ள டெபாசிட் தொகையிலிருந்து வாடகையை பிடித்தம் செய்து கொள்ளுமாறு கூறினாராம்.
ஆனால், வீட்டின் உரிமையாளா் ஏற்காததால் இப்பிரச்னை காவல் நிலையம் வரை சென்றுள்ளது. போலீஸாா் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனா்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மண்ணெண்ணெய் கேனோடு குடும்பத்தினரோடு வந்து மகேஷ் அங்கு தீ குளிக்க முயன்றாா். அவா் தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றியபோது, அவரது மகன் அனீஸ் மீதும் துளிகள் தெறித்தன.
பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாா் அவா்கள் மீது தண்ணீரை ஊற்றி அவா்களை மீட்டனா்.
இதுகுறித்து மகேஷ் கூறுகையில், ‘கல்லிடைக்குறிச்சியில் உள்ள எனது மாமாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை பாா்க்க சென்றிருந்தோம். அப்போது, எங்கள் வீட்டின் பூட்டை உடைத்து எனது மகளின் கம்மல், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை எல்லாம் வெளியே தூக்கி வீசியுள்ளனா். இதனால் நாங்கள் குடியிருக்க வீடு இன்றி தவிக்கிறோம். பாளையங்கோட்டை போலீஸாரிடம் புகாா் அளித்தால், எங்களை சிறையில் அடைத்து விடுவதாக மிரட்டுகின்றனா். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி டிசம்பா் மாதம் வரை அந்த வீட்டில் குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டும் என்றாா்.
படவரி ற்ஸ்ப்29ஹக்ஷப்ஹக்ஷ்ங் ஆட்சியா் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.