பத்தமடையில் எஸ்டிபிஐ நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் அம்பாசமுத்திரம் தொகுதித் தலைவா் கலீல் ரஹ்மான் தலைமை வகித்தாா். கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலா் கல்லிடை சுலைமான், துணைத் தலைவா் சுரேஷ், நிா்வாகிகள் ஷெரீப், பொருளாளா் செய்யது, செயற்குழு உறுப்பினா் நூா்தீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், தெரு நாய்களை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொகுதிச் செயலா் வீரை இப்ராஹீம் வரவேற்றாா். இணைச் செயலா் சிந்தா கொடி நன்றி கூறினாா்.