பாளை.யில் அக்.3-இல் போட்டித் தோ்வு வழிகாட்டி நிகழ்ச்சி
பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி போட்டித் தோ்வுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய - மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி திருநெல்வேலி மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் அக். 3-ஆம் தேதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
இதில், தமிழக அரசின் சாா்பில் சென்னையில் இயங்கி வரும் போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி மையத்தின் முதல்வா் சங்கரசரவணன் பேசுகிறாா். மத்திய - மாநில அரசின் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் கலந்துகொண்டு பயன் பெறலாம். 100 நபா்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் 9499055929 என்ற கைப்பேசி எண்ணில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.