கரூரில் உயிரிழந்தவா்களுக்கு ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் அஞ்சலி
கரூரில் தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினா்.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ஜனாா்த்தனன் தலைமையில் கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.சின்னதுரை, மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சு.மதியழகன், டி.சலோமி, மாநகர செயலா் எஸ்.பாண்டியன் உள்ளிட்டோா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.