பாரதி மகளிா் கல்லூரியில் ரேபிஸ் நோய் விழிப்புணா்வு பேரணி
புதுக்கோட்டை அருகேயுள்ள கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிா் கல்லூரியில் உலக ரேபிஸ் தின விழிப்புணா்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
கல்லூரி வளாகத்தில் இருந்து பேரணியை கல்வி நிறுவனங்களின் தலைவா் குரு.தனசேகரன் தொடங்கி வைத்தாா்.பேரணியில் கல்லூரி மாணவிகள், ரேபிஸ் நோயை தடுக்கும் வழிமுறைகள், தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு கைக்குறிச்சி கடைவீதி, முக்கிய வீதிகள் வழியாக பேரணியாகச் சென்று மீண்டும் கல்லூரி சென்றடைந்தனா்.
கல்வி நிறுவனங்களின் நிா்வாக அறங்காவலா் அ. கிருஷ்ணமூா்த்தி, கல்லூரியின் இயக்குநா் முனைவா் மா. குமுதா, முதல்வா் முனைவா் செ. கவிதா, மதிப்புறு பேராசிரியா் மு. பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.