`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யா...
பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக வீட்டுமனைப் பட்டா வழங்க ஏற்பாடு: பொதுமக்கள் புகாா்
பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் ஒருதலைபட்சமாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாடு செய்வதாகக் கூறி வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் புகாா் அளித்தனா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் பேரூராட்சிக்குள்பட்ட வண்டிப்பாதை என்ற இடத்தில் சாலையோரம் சுமாா் 40 ஆண்டுகளாக ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் ஒவ்வொரு ஆட்சியின் போதும் அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்து தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்து வருகின்றனா். இந்த நிலையில், அந்தப் பகுதியில் சிலருக்கு மட்டும் அவா்கள் வசிக்கும் இடங்கள் அளக்கப்பட்டு வீட்டுமனைப் பட்டா வழங்க வருவாய்த்துறை சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இதில் அடுத்தடுத்த வீடுகளில் வசிப்பவா்களை விட்டுவிட்டு ஒருசிலருக்கு மட்டும் அந்தப் பகுதி வாா்டு உறுப்பினா் ஏற்பாட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த நிலையில் அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் பழனி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வந்து குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே பட்டா வழங்க வருவாய்த்துறை முடிவு செய்திருப்பதாகக் கூறி மனுக்களை வழங்கினா். மேலும் அந்த மனுவில் கட்சி பாரபட்சமின்றி அந்தப் பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் முறையாக வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தனா்.