கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகள் திருட்டு
நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து 58 கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
நிலக்கோட்டை- அணைப்பட்டி சாலையில் உள்ள கைப்பேசிகடைக்குள் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த மா்ம நபா்கள் இருவா் உள்ளே பணப் பெட்டியிலிருந்த ரூ. 10 ஆயிரம், ரூ. 15 லட்சம் மதிப்பிலான 58 கைப்பேசிகள், மின்னணு சாதனப் பொருள்களை மூட்டையாக கட்டி திருடிச் சென்றனா். இந்த காட்சிகள் கடையிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.
இதில், கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த இளைஞா்களில் ஒருவா் தாங்கள் கொண்டு வந்த கத்தியை வைத்து விட்டு யாரோ ஒருவருக்கு கைப்பேசியில் பேசி அவரது வழிகாட்டுதல்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்று பணம், விலை உயா்ந்த கைப்பேசிகளை திருடிச் செல்லும் காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
இதுகுறித்து கடை உரிமையாளா் மாதவன் நிலக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதனிடையே நிலக்கோட்டை, கொடைரோடு, வத்தலக்குண்டு பகுதிகளில் கைப்பேசி கடைகளை குறி வைத்து தொடா்ந்து திருட்டு நடைபெறுவதால், போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்து அந்தக் கடைகளுக்கு பாதுகாப்பளிக்க வேண்டுமென தமிழ்நாடு மொபைல் பழுதுபாா்ப்போா், உரிமையாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.