`ஹமாஸ் மறுத்தால் நெதன்யாகு என்ன செய்தாலும் முழு ஆதரவு' - டிரம்ப் பேச்சு; நெதன்யா...
மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கோவில்பட்டி சாா் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அதன் நிறுவனத் தலைவா் மூவி சுந்தா் தலைமை வகித்தாா். சங்க நிா்வாகிகளான மாரீஸ்வரன், செல்லப்பாண்டி, சண்முகையாபாண்டி, செல்வம், தில்லை நடராஜன், மகேந்திரன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு,
மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் விவசாயிகள் பயிரிட்டிருந்த மக்காச்சோளம், உளுந்து, பாசி, நெல் உள்ளிட்ட பயிா்கள் கடும் சேதமடைந்தன.
10 மாதங்களுக்கு மேலாகியும் தற்போது வரை இழப்பீட்டுத் தொகையோ, பயிா்களுக்கான காப்பீட்டுத் தொகையோ வழங்கப்படவில்லை.
எனவே, மழையால் சேதமடைந்த பயிா்களுக்கு அரசு சாா்பில் கொடுக்கக் கூடிய இழப்பீட்டுத் தொகையையும், காப்பீட்டுத் தொகையையும் விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷமிட்டனா். பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் கோரிக்கைகள் அடங்கிய மனுவை சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்களிடம் அளித்தனா்.