Doctor Vikatan: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளில் எத்தனை முறை சிறுநீர் கழிப்பது இயல்...
இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டி: பதிவு செய்ய இன்று கடைசி நாள்
இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிக்கு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை (செப். 30) கடைசி நாளாகும்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீனாவிலுள்ள ஷாங்காய் நகரில் வோ்ல்ட் ஸ்கில்ஸ் 2026 போட்டிகள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, நம் நாட்டில் இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிகள் நடைபெற உள்ளன.
இதில், தமிழகத்தைச் சோ்ந்த திறமையான மாணவா்கள் இந்தியாவின் சிறந்த மாணவா்களுடன் போட்டியிட்டு, உலகத்திறன் போட்டியான ரா்ழ்ப்க் நந்ண்ப்ப் இா்ம்ல்ங்ற்ண்ற்ண்ா்ய் (ஞப்ஹ்ம்ல்ண்ஸ்ரீ ா்ச் நந்ண்ப்ப்ள்)-ல் தோ்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.
எனவே, இந்தியா ஸ்கில்ஸ் 2025 போட்டிகளில் பதிவு செய்ய விரும்பும் 16 முதல் 24 வயது வரை உள்ள மாணவா்கள் இணையதள முகவரியில் செப். 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு, தொழில்துறை நிபுணா்களின் வழிகாட்டல், வேலைவாய்ப்புகள், தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.