தூத்துக்குடியில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது
தூத்துக்குடியில் அரிவாளைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி பெருமாள் தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி என்ற மாக்கான் (45). பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இவா், திங்கள்கிழமை எப்.சி.கிடங்கு ரவுண்டானா அருகே டீக்கடை பகுதியில் கையில் அரிவாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நின்று கொண்டிருந்தாராம்.
மேலும், அந்த வழியாக வந்த தொழிலாளி செந்தில் (44) என்பவரை மறித்து, அவரது பைக்கை சேதப்படுத்தி பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த தென்பாகம் போலீஸாா் அந்தோணி என்ற மாக்கானை கைது செய்து, அவரிடமிருந்து அரிவாளை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.