களக்காடு அருகே சிறுத்தை நடமாட்டம்
களக்காடு அருகே சிங்கிகுளத்தில் பச்சையாற்றின் கரையோரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம்-வடவூா்பட்டி செல்லும் சாலையில் பச்சையாற்றின் கரையோரத்தில் சிறுத்தை கால் தடம் இருப்பதை அறிந்த அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் வனத்துறையினருக்கு தெரிவித்துள்ளனா். இதையடுத்து, களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.
பச்சையாற்றின் கரையையொட்டி விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் நாள்தோறும் அதிகாலை, இரவு நேரங்களில் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றனா். அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மிகவும் அச்சத்தில் உள்ளனா்.
வனத்துறையினா் சிறுத்தையைப் பிடிக்க, அப்பகுதியில் கூண்டு வைத்து கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.