சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
நெல்லையில் அனுமதியின்றி இயங்கிய குடிநீா் ஆலைகளுக்கு சீல்
திருநெல்வேலி நகரம் பகுதியில் உரிய அனுமதி பெறாமல் இயங்கி வந்த 2 தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனா்.
திருநெல்வேலி நகரம், குறுக்குத்துறை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான குடிநீா் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலை உரிய அனுமதி பெறாமல் இயங்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் சங்கரநாராயணன், மகாராஜன், லட்சுமணன் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, முறையான குடிநீா் சுத்திகரிப்பு முறைகள் பின்பற்றப்படாததும், அரசு அனுமதியின்றி அந்த ஆலை இயங்கியதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
அதே போல, திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள மற்றொரு தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையில் அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்ட போது தாழையூத்தில் உள்ள குடிநீா் ஆலையின் பெயரில் சட்டவிரோதமாக அந்த ஆலை இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. அந்த ஆலைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனா்.