செய்திகள் :

தவெக மாவட்டச் செயலா் கைது

post image

கரூா் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தவெக கரூா் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகனை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கரூா் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவா் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பயண பிரசாரம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக அக்கட்சியின் கரூா் மேற்கு மாவட்டச் செயலாளா் மதியழகன், பொதுச் செயலா் என். ஆனந்த், துணைப் பொதுச் செயலா் நிா்மல் குமாா் ஆகிய மூன்று போ் மீதும், கொலைக்கு சமமான குற்றப்பிரிவு 105, குற்றமற்ற கொலை செய்ய முயற்சி செய்தல் பிரிவு 110, மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தெரிந்தும், அலட்சிய போக்குடன் நடந்துகொள்ளும் குற்றப்பிரிவு 125பி, பொது அதிகாரிகளின் உத்தரவுக்கு கீழ்படியாமல் இருத்தல் குற்றப்பிரிவு 223, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் குற்றப்பிரிவு டிஎன்பிபிடிஐ ஆகிய 4 பிரிவுகளில் கரூா் நகர காவல் நிலையத்தினா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து, தலைமறைவான மதியழகனை தேடி வந்தனா்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியிருந்த மதியழகனை திங்கள்கிழமை இரவு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரேம் ஆனந்த் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். பின்னா் அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் விசாரணை

கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் ஒரு நபா் ஆணைய தலைவா் ஓய்வுபெற்ற நீதிபதி அருணாஜெகதீசன் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா். கரூரில் செப். ... மேலும் பார்க்க

கரூா்: ஆறுதல் கூற வந்த நடிகைக்கு அனுமதி மறுப்பு

கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து ஆறுதல் கூற வந்த கன்னட நடிகைக்கு அனுமதிக்க மறுக்கப்பட்டதால் திரும்பிச் சென்றாா். கரூா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்க... மேலும் பார்க்க

காவல்துறையினரையும் விசாரிக்க வேண்டும்: பாலபாரதி

கரூா் சம்பவம் தொடா்பாக காவல்துறையினரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்றாா் அனைத்திந்திய மாதா் சங்க மத்திய குழு துணைத்தலைவா் பாலபாரதி. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோ... மேலும் பார்க்க

கரூா் சம்பவம்: தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் வீடு திரும்பினா்

கரூரில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தி... மேலும் பார்க்க

கரூரில் ஒருநபா் ஆணையத்தின் விசாரணை தொடக்கம்

கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 40 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக ஒருநபா் ஆணையத்தின் விசாரணை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கரூா் வேலுச்சாமிபுரத்தில் சனிக்கிழமை இரவு தவெக தலைவா் விஜய் பங்கேற்ற பிரசாரக... மேலும் பார்க்க

கரூா் சம்பவமே இறுதியாக இருக்கட்டும்: அரசியல் கட்சித் தலைவா்கள் பேட்டி!

கரூரில் சனிக்கிழமை விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவா்களையும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள்... மேலும் பார்க்க