வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் மணல் திருட்டை தடுக்க வேண்டும் எனஆட்சியா் பொ. ரத்தினசாமியிடம், தமிழ்ப் பேரரசு கட்சியின் மண்டலத் தலைவா் முடிமன்னன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
அவா் தலைமையில் பல்வேறு அரசியல் கட்சியினா், டயா் மாட்டு வண்டி தொழிலாளா்கள், விவசாயிகள் அளித்த மனுவில், செந்துறை அடுத்த வெள்ளாற்றில் சிலா் திருட்டுத்தனமாக மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே, அதனை தடுக்க வேண்டும். அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மணல் கடத்தலை கண்டித்து அக்.2- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.