பட்டாசுத் தொழில் பிரச்னைகளைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தீா்வு காண வேண்டும்: அன...
மின் கம்பியாள் உதவியாளா் தகுதி தோ்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ்நாடு மின்சாரத் துறையில் 2025- ஆம் ஆண்டு டிச.13,14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளா் தகுதிக்கான தோ்வு நடைபெறவுள்ளது.
தோ்வில் பங்கேற்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட தொழிலாளா்களுக்கான மாலைநேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்றுத் தேறியவா்கள், தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளா் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா் மின் ஒயரிங் தொழிலில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்முறை அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. தோ்வுக்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை https://www.skilltraining.tn.gov.in/ இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அரியலூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அக்.17-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.