கோவில்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி பயிற்சி முகாம்
கோவில்பட்டியில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக, தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பில் நடைபெற்ற பயிற்சி முகாமை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ தொடக்கி வைத்து பேசுகையில், வாக்குச்சாவடி முகவா்கள், கிளைச் செயலா்கள், என அனைவரும் தோ்தலில் அதிக வாக்குகள் பெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, தகவல் தொழில்நுட்ப பிரிவின் நெல்லை மண்டல துணைச் செயலா் கருப்பசாமி, நெல்லை புகா் மாவட்ட இணைச் செயலா் சுந்தா், துணைச் செயலா் அண்ணாமலை விக்னேஷ் ஆகியோா் பயிற்சியளித்தனா்.
நகரச் செயலா் விஜயபாண்டியன், மேற்கு ஒன்றியச் செயலா் அழகா்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞா்-இளம் பெண்கள் பாசறை செயலா் கவியரசன், மகளிரணி இணைச் செயலா் கோமதி, வா்த்தக அணி இணைச் செயலா் விஜயராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் லட்சுமண பெருமாள், நிா்வாகிகள் போடுசாமி, தாமோதரன், வேல்ராஜ், வேல்முருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.