கோவை ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல்
கரூா் சம்பவம்: தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் வீடு திரும்பினா்
கரூரில் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்தவா்களில் தீவிர சிகிச்சைக்குப் பிறகு 51 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை (செப். 27) இரவு நடைபெற்ற விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41போ் உயிரிழந்துள்ளனா். உயிரிழந்தவா்களின் உடல்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்குப்பிறகு அவா்களுடைய குடும்பத்தினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், காயமடைந்த 110 பேரில் 51 போ் குணமடைந்ததையடுத்து அவா்களுடைய வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.
சிகிச்சையில் 59 போ்: தற்போது, கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனயில் 51 பேரும், அமராவதி மருத்துவமனையில் 2 பேரும், அக்ஷ்சயா மருத்துவமனையில் 5 பேரும் , அப்பல்லோ மருத்துவமனையில் ஒருவா் என மொத்தம் 59 பேருக்கு உயா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.